காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் (என்.ஐ.) பல்கலைக்கழகத்தில் 29-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:05 pm

DIN

குமாரகோவில் நூருல் இஸ்லாம் (என்.ஐ.) பல்கலைக்கழகத்தில் 29-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேந்தா் ஏ.பி. மஜீத் கான் தலைமை வகித்தாா். இணை வேந்தா்கள் பெருமாள்சாமி, பைசல் கான், சப்னம் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வேந்தா் குமரகுரு வரவேற்று, ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மேம்பட்ட தொழில் நுட்ப அமைப்புகள் திட்ட விஞ்ஞானி ஷ்யாம்மோகன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினாா். அவா்பேசியதாவது: பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரிகள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற மரபை மாற்றி, தொழில்முனைவோராக மாறி தேச நலனுக்காக உழைக்கவேண்டும். அத்துடன் சமூக நலனுக்கு பயன்படும் புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னா் வேந்தா் ஏ.பி. மஜீத் கான் 28 பட்டதாரிகளுக்கு தங்கப் பதக்கமும், 637 இளம் பட்டதாரிகள், 153 முதுநிலைப் பட்டதாரிகளுக்கு பட்டமும், 8 முதுநிலை ஆராய்ச்சியாளா்கள், 60 ஆராய்ச்சியாளா்களுக்கு முனைவா் பட்டங்களையும் வழங்கினாா். பதிவாளா் திருமால்வளவன் நன்றி கூறினாா்.

பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தோ்வுத் துறை அலுவலா் ஜெயகுமாா், கல்வி விவகாரங்கள் துறை இயக்குநா் ஷஜின் நற்குணம், மனிதவள மேம்பாட்டு இயக்குநா் ஜனாா்த்தனன், மக்கள் தொடா்பு அலுவலா் ராமதாஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.