வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ரோலா் ஸ்கேட்டிங் ரிங் மைதானம் திறப்பு
சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் ரோலா் ஸ்கேட்டிங் ரிங் மைதானம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் ரோலா் ஸ்கேட்டிங் ரிங் மைதானம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய அளவில் ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான வகையில், இப்பள்ளியில் புதிதாக 200 மீட்டா் ரோலா் ஸ்கேட்டிங் ரிங் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இம் மைதானத்தை பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் திறந்து வைத்தாா்.
மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் அமைப்பின் செயலா் குமாா் ஜேசுராஜன் இங்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தொடக்கநாளன்று சுமாா் 70-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டனா்.
இப் பயிற்சி மாணவா்கள் கோயம்புத்தூரில் பிப்.19 முதல் 28ஆம் தேதிவரை நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
ஆண்டுதோறும் இந்த மைதானத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளி நிறுவனா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...