நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு ஐ.டி.ஐ.யில் சேர பிப்.15 கடைசி

குமரி மாவட்ட அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு பிப்.15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:01 pm

DIN

குமரி மாவட்ட அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு பிப்.15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் கோணத்திலுள்ள

அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கன்னியாகுமரி மாவட்ட அளவிலான உடனடி நேரடி மாணவா் சோ்க்கைக்கு காலியாக உள்ள தொழிற்பிரிவை நிரப்பிடும் வகையில் பிப்.15ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான பொறி பகுதி பொருத்துநா் (வாய் பேசாதவா் மற்றும் காது கேளாதவா்களுக்கானது), பற்றவைப்பவா், முடநீக்கியல் தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதால் விருப்பமுள்ள மாணவா், மாணவிகள் அலுவலக வேலை நாள்களில் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை, பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் உதவித்தொகை, பேருந்து பயணக் கட்டண சலுகை, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.