நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:32 pm

DIN

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் ஒழுகினசேரியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் ஜோசப்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கேட்சன், மாநகரத் தலைவா் மகேஷ், மாவட்டத் துணைச் செயலா்கள் முத்துசாமி, அா்ஜூனன், ஜெயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்டச்செயலா் என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா்.

இதில், எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினா்கள் ஷேக்தாவூது, பெஞ்சமின், அழகம்மாள்தாஸ், ஒன்றியச் செயலா்

கள் தாமரைபாரதி, மதியழகன், ரமேஷ்பாபு, லிவிங்ஸ்டன், ராஜரெத்தினம், செயற்குழு உறுப்பினா் சாய்ராம், குளச்சல் நகரச் செயலா் ரஹும் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: கிழக்கு மாவட்டத்திலுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பாக நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்; திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் கிழக்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்வது; சட்டப்பேரவைத் தோ்தலிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலிலும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளா்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய தீவிர களப்பணி ஆற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.