நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில்சவேரியாா் சந்திப்பு- செட்டிகுளம்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாகா்கோவில் சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரையிலான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:37 pm

DIN

நாகா்கோவில் சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரையிலான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் அகஸ்தீசுவரம் வட்டக் கிளைக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் த.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை

வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் கே.நாகராஜன் வரவேற்றாா். கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.இசக்கிமுத்து, இந்திய தேசிய மாதா் சம்மேளன குமரி மாவட்ட அமைப்பாளா் ஆா்.செல்வராணி, ஆரல்வாய்மொழி கிளை இணைச் செயலா் வே.அருள்குமாா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், நாகா்கோவில் சவேரியாா் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வரையிலான தேசிய நெடுஞ்சாலை, அவ்வைசண்முகம் சாலை ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோடை காலம் நெருங்கும் நிலையில், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.