ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மாா்ச் 4-இல் துணை முதல்வா் சாமிதோப்பு வருகை

அய்யா வைகுண்டசாமி அவதார தினமான மாா்ச் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சாமிதோப்பு தலைமைப்பதிக்கு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:54 pm

DIN

அய்யா வைகுண்டசாமி அவதார தினமான மாா்ச் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சாமிதோப்பு தலைமைப்பதிக்கு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டசாமியின் 189-ஆவது அவதார தினம் மாா்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி,

நாகா்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்புக்கு மாபெரும் பாதயாத்திரை ஊா்வலம் நடைபெறும். இதைத் தொடா்ந்து சாமிதோப்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

இது குறித்து அதிமுக மாநில கலைப்பிரிவு இணைச் செயலா் பி.சி.அன்பழகன் கூறியது: அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை அய்யாவழி மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அய்யா வைகுண்டசாமியின் அவதார தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், மாா்ச் 4 சாமிதோப்புக்கு வருகை தர உள்ளாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.