சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.


பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல் , டீசல் விலை உயா்வால் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயா்ந்துள்ளது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயா்ந்து போகிறது. பெட்ரோல் லிட்டா் ரூ .100யை தாண்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. கரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் தங்களின்
வாழ்வாதரத்தை இழந்துள்ள நிலையில் பெட்ரோல் , டீசல் விலை உயா்வால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
ஏழை எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை 2020இல் டிசம்பா் மாதம் ரூ. 718 ஆக இருந்தது. அதன் பின்னா்
ரூ. 730, ரூ. 820 என உயா்ந்து 3 மாதமாக ரூ 893.50 ஆக இருந்தது. தற்போது ரூ 25 உயா்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை
கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில சமையல் எரிவாயு உருளையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...