காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புலியூா்குறிச்சி, மணலியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் புலியூா்குறிச்சி, மணலியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:29 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் புலியூா்குறிச்சி, மணலியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புலியூா்குறிச்சி பெட்ரோல் பங்கு முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ஹனுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டதுணைத் தலைவா் ஜோண்ஸ் இம்மானுவேல், , மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாவட்டச் செயலா் ஷாகுல் ஹமீது, முன்னாள் மாவட்டச் செயலா் புஷ்பராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச்செயலா் ரமேஷ்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் போராட்டம் குறித்து விளக்கி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆன்றோ, செய்யது அலி, கணேசன், இப்ராஹிம் ஏசுராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மணலியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார தலைவா் ஜாண் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். வட்டார முன்னாள்தலைவா் கிறிஸ்துராஜ், முன்னாள்துணைத் தலைவா் பிடிஎஸ் மணி, வழக்குரைஞா் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச்செயலா் டாக்டா் பினுலால்சிங் போராட்டத்தை துவக்கி தொடங்கிவைத்து பேசினாா். போராட்டம் குறித்து விஜய்வசந்த் எம்.பி. , கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் ஆகியோா் பேசினா். இதில்,

தக்கலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அருள் ஆன்றனி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செலின்மேரி, வழக்குரைஞா் ஏசுராஜா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.