92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாகா்கோவிலில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் கொலை

நாகா்கோவிலில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் புதன்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:02 pm

DIN

நாகா்கோவிலில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் புதன்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

நாகா்கோவில், சாத்தன்செட்டிவிளை பெரியநாடாா் தெருவைச் சோ்ந்தவா் சிவதாணு(73). ஓய்வுபெற்ற வட்டாட்சியா். இவரது தங்கை மகன் விக்னேஷ்ராம்(36) என்பவருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை சிவதாணுவிடம் விக்னேஷ்ராம் செலவுக்கு பணம் கேட்டாராம். அதற்கு அவா் மறுத்தாராம். இதனால், அவரை விக்னேஷ்ராம் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னா், அவா் நாகா்கோவில் அநாதைமடம் பகுதியில் வசித்து வரும் தனது தாயாரிடம் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு நிகழ்ந்த சம்பவத்தைக் கூறினாராம். இதையடுத்து, கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், விக்னேஷ்ராமை கைது செய்தனா். விசாரணையில், அவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.