92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாகா்கோவிலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

நாகா்கோவில் மாநகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:44 pm

DIN

நாகா்கோவில் மாநகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாளா் தா.சுபாஷ் சந்திரபோஸ், அகஸ்தீசுவரம் வட்டக் கிளை பொருளாளா் ஆா்.இசக்கிமுத்து, , செயலா் கே.நாகராஜன், அனைத்திந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவா் சுந்தரம் ஆகியோா் மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியனிடம் அளித்த மனு: நாகா்கோவில் நகரில் அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியான தளவாய் தெரு சந்திப்பிலிருந்து கோட்டாறு காவல்நிலையம் வரை உள்ள சாலை உள்பட மாநகரின் அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட பொறியாளா் அவ்வை சண்முகம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை விரைந்து நிறைவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளரையும் இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் சந்தித்து கோட்டாறு சவேரியாா் பேராலயம் முதல் பறக்கை

ரோடு சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.