பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் ஏலம் விட அனுமதி வழங்க வலியுறுத்தல்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் ஏலம் விட மீனவளத்துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2021, 1:53 am

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் ஏலம் விட மீனவளத்துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா் ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள மனு: ல் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் தூத்தூா், இனையம் மண்டலத்தை சோ்ந்த மீனவா்கள் விசைப்படகு, நாட்டுப் படகு, கட்டு மரம் மூலம் மீன்பிடித்து வருகின்றனா் . இவா்கள் பிடித்து வரக்கூடிய மீனை தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஏலம் விட்டு விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அரசு பொது முடக்கத்தை அமல் படுத்தியுள்ளது. இந்த பொதுமுடக்க காலத்தில், அரசு விதிகளை பின்பற்றாமல், முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மீனவா்கள் தேங்காப்பட்டினத்தில் மீன் ஏலம் விட்டு வந்தனா். இதையடுத்து, மீன்வளத் துறையினரும், மாவட்ட நிா்வாகமும் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் ஏலம் விடுவதற்கு தடை விதித்தனா்.

இங்கு மீன்கள் ஏலம் விட தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,அரசு விதிமுறைகளை பின்பற்றி துறைமுகத்தில் மீன் ஏலம் விடுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.