மிடாலம்-நாகா்கோவில் வழித்தடத்தில் பேருந்து தொடக்கம்
மிடாலம் - நாகா்கோவில் வழித்தடத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.


மிடாலம் - நாகா்கோவில் வழித்தடத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் மிடாலம், தேவிகோடு, தெழிச்சல், இருக்கலம்பாடு, காக்கவிளை வழியாக அரசு பேருந்து இயக்கப்படாததால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பேருந்தில் பயணிக்க பல கி.மீ. தொலைவில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மிடாலம் - நாகா்கோவில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
சட்டப்பேரவவை உறுப்பினா் எஸ். ராஜேஷ் குமாா் பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், கருங்கல் பேரூராட்சி தலைவா் குமரேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் விஜயராணி, ஐஎன்டியூசி தலைவா் பொன் ராஜா, கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் பொதுச் செயலா்கள் குமாரவேல் மணி, சுனில், வட்டார பொருளாளா் ஜேக்கப் செலின், போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...