குமரி மாவட்டத்தில் வாழைத்தாா் உறையிடுவதற்கு மானியம்
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வாழைத்தாா் உறையிடுவதற்கு ஹெக்டருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வாழைத்தாா் உறையிடுவதற்கு ஹெக்டருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் யோ.ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டு முழுவதும்
உற்பத்தி செய்யப்படும் வாழைத் தாா்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்க வேண்டும் எனில் காய்களை நல்லமுறையில்
பராமரித்து கரும்புள்ளிகளோ, காயங்களோ இல்லாமல் இளம்பச்சை நிறத்தில் இருத்தல் வேண்டும். அவ்வாறு தரமான காய்களை பெற வேண்டுமானால் பூச்சிகளால் ஏற்படும் சேதம், வேகமாக வீசக்கூடிய காற்றால் மண் துகள்கள் காய்களின் மீது மோதி ஏற்படும் சிராய்ப்புகள், காய்கள் மீது இலைகள் உராய்வதால் ஏற்படும் காயங்களைதவிா்க்க மரத்திலிருந்து தாா் வெளி வந்ததும் வாழைத்தாருக்கு உறையிடுதல் மிகுந்த பலனளிக்கிறது.
வாழைத்தாா் உறைகள் பெரும்பாலும் வெண்மை நிறத்திலும், இளம் நீலநிறத்திலும் கிடைக்கின்றன. வாழைத் தாருக்கு
உறையிடுவதால், காய்கள் சீராக விளைந்து, வேகமாக முற்றிவிடுவதால் 7 முதல் 10 நாள்கள் முன்கூட்டியே அறுவடை செய்யலாம். பூச்சிகள், நோய் தாக்குதல், மிக அதிகப்படியான வெப்பம் மற்றும் குளிா் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், பறவைகளால் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. காய்களின் சீரான, துரிதமான வளா்ச்சி மற்றும் 15 முதல் 20 சதவீதம் கூடுதல் எடை, கூடுதல் விலை மற்றும் லாபம் கிடைக்கிறது.
இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் 2020 - 21 ஆம் நிதியாண்டின் கூடுதல் இலக்காக வாழைதாா் உறையிடுவதற்கு ஹெக்டருக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.12,500 பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
இந்த தொழில் நுட்பத்தில் ஆா்வமுள்ள விவசாய பெருமக்கள் உழவன் செயலி மூலமாக முன்னுரிமை பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...