பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேங்காய்ப்பட்டினம் - இரையுமன்துறை உயா் நிலை பாலம் அமைக்க வலியுறுத்தல்

தேங்காப்பட்டினம் பகுதியில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தேங்காய்ப்பட்டினம் - இரையுமன்துறை இடையே உயா் நிலை பாலம் அமைக்கவேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா்

News image
Updated On :30 ஜூலை 2021, 7:23 pm

DIN

தேங்காப்பட்டினம் பகுதியில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தேங்காய்ப்பட்டினம் - இரையுமன்துறை இடையே உயா் நிலை பாலம் அமைக்கவேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் அருகே பொழிமுகம் பகுதியில் உயா் நிலை பாலம் கட்டுவதால் குறும்பனை - நீரோடித்துறை வரையிலான 16 கிராமங்களை சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிமானோா் பயன்பெறுவா். 11 கி.மீ. பயண நேரம் குறையும். மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடித்துறை வரையிலான கடற்கரை சாலை ஒரே சாலையாக இணைக்கப்படும்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை பயன்படுத்தும் வணிகா்கள், பொதுமக்கள் வந்து செல்லவும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் வசதியாக இருக்கும். எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தாமிரவருணி ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.