பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தினமும் 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி : காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் தினமும் 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:07 pm

DIN

இந்தியாவில் தினமும் 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் தலைமையில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கிள்ளியூா் ராஜேஷ்குமாா், விளவங்கோடு விஜயதரணி உள்ளிட்டோா், குடியரசு தலைவருக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனு: கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என கூறப்பட்டதன்அடிப்படையில் தற்போது தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆனால் போதிய அளவு தடுப்பூசி மத்திய அரசு வழங்காததால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடுப்பூசி போடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுகிற முழு பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும். தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி விலையில் நிலவும் குழப்பங்களை சரி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் ராதாகிருஷ்ணன்( குமரி கிழக்கு) , தாரகை கத்பா்ட் (குமரி மேற்கு) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.