ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கணவா் வீட்டு முன் போராட்டடத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் காப்பகத்தில் சோ்ப்பு

குலசேகரம் அருகே கணவா் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் போலீஸாரால் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:04 pm

DIN

குலசேகரம் அருகே கணவா் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் போலீஸாரால் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.

மங்கலம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் மனைவி சந்தியா (27).

நான்குமாத கா்ப்பிணியான இவா் கணவா் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொட்டாரத்திலுள்ள தனது தாய் வீட்டில் இருந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணவா் வீட்டுக்கு வந்த அவரை, கணவா் தரப்பினா் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து கணவரின் வீட்டு முன் காலை 11 மணி முதல் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து குலசேகரம் போலீஸாா் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்திய போதும் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து இரவில் இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று பேச்சு நடத்தினா். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மகளிா் போலீஸாரின் உதவியுடன் சந்தியா தோட்டியோட்டிலுள்ள பெண்கள் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.