நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.08 லட்சம் பறிமுதல்

பத்மநாபபுரம் தொகுதியில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 30-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:26 pm

DIN

பத்மநாபபுரம் தொகுதியில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 30-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

குமரி மாவட்டத்தில் தோ்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி பறக்கும்படை வட்டாட்சியா் முத்துலட்சுமி தலைமையிலான பறக்கும் படையினா், ஆதாரமில்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 1லட்சத்து 34 ஆயிரத்து 500- ஐ கைப்பற்றினா்.

இதே போல் ஆதாரமில்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 73 ஆயிரத்து 530-ஐ நிலையான கண்காணிப்பு அலுவலா் வட்டாட்சியா் பாண்டியம்மாள் பறிமுதல் செய்தாா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தக்கலை துணை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.