கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு
குலசேகரம் அருகே கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.


குலசேகரம் அருகே கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
பேச்சிப்பாறை அருகேயுள்ள அன்புநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அஜித்நாத் (31). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம்.
இவா், கடந்த 26ஆம் தேதி வீட்டிலிருந்து சென்றவா் பின்னா் காணாமல் போனாராம். ஆனால், இவரது மோட்டாா் சைக்கிள் குலசேகரம் அருகே கொச்சுவீட்டுப்பாறை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் பொன்மனை அருகே செல்லன்துருத்தி பகுதி கால்வாயின் மதகுப் பகுதியில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரித்தனா். விசாரணையில் அது அஜித்நாத் தான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...