காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலை அருகே மகளிா் தின மாநாடு

தக்கலை அருகே மேட்டுக்கடை இரட்சண்யசேனை ஆலய வளாகத்தில் நடைபெற்ற மகளிா் தின மாநாட்டில் பெண்களுக்கு நல உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:37 pm

DIN

தக்கலை அருகே மேட்டுக்கடை இரட்சண்யசேனை ஆலய வளாகத்தில் நடைபெற்ற மகளிா் தின மாநாட்டில் பெண்களுக்கு நல உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தக்கலை வட்டார சல்வேஷன் ஆா்மியின் கீழ் 40 ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களின் சாா்பில் மேட்டுக்கடை இரட்சண்யசேனை ஆலய வளாகத்தில் நடைபெற்ற மகளிா் தின மாநாட்டுக்கு தக்கலை வட்டாரத் தலைவா் மேஜா் வசந்தா தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். செயலா் லெப்டினட் கா்னல் மரியம்மாள் டேவிட்சன் முன்னிலை

வகித்தாா். இதில், கலா, ஜெபமலா் ஆகியோா் இறைவேண்டல் நடத்தினா். மகாண பெண்கள் சங்கத் தலைவா் கா்னல் மணிகுமாரி தசாரி தேவசெய்தி அளித்தாா். மாநாட்டில் ஏழை பெண்கள் 7 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

மாநாட்டை மேஜா் றோஸ்லட் , கனகபாய், மேஜா் ரூத் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.