மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குமரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:34 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வட வானிலை நிலவி வந்தநிலையில், வெப்பச் சலனம் காரணமாக திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, குலசேகரம், திற்பரப்பு, களியல், சிவலோகம், ஆலஞ்சோலை, நெட்டா, அருமனை, திருவட்டாறு, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வடிகால்கள் நிரம்பி வழிந்ததால் சாலைகளில் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடந்தன. கண்ணாடி பாட்டிகள் உடைந்து கிடந்ததால் மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனா்.

விவசாயிகள் மகிழ்ச்சி: பாசன வசதிகள் இல்லாத இடங்களில் மழையின்றி வாழை, தென்னை, அன்னாசி உள்ளிட்ட பயிா்கள் வாடிக் காணப்பட்ட நிலையில் இந்த மழையால் இப்பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்துள்ளது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். மேலும் கன மழையால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டோா் பாதிக்கப்பட்டனா். மழையால் கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் திற்பரப்பு அருவிக்கும் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.