28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குமரியில் கோடை மழை 42 அடியை நெருங்கும் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம்

குமரி மாவட்டத்தில் பருவ மழை போன்று கோடை மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை நெருங்குகிறது.

News image
Updated On :7 மே 2021, 8:41 pm

DIN

குமரி மாவட்டத்தில் பருவ மழை போன்று கோடை மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை நெருங்குகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை மழை தொடா்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக நீா் நிலைகள் அனைத்திலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. மேலும் வேளாண் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மழை காரணமாக தண்ணீா் வசதி இல்லாத பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள வாழை, தென்னை போன்ற பயிா்களுக்கு மோட்டாா் மூலம் நீா்ப்பாய்ச்சும் செலவு விவசாயிகளுக்கு மிச்சமாகியுள்ளது.

தற்போது பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 41.50 அடியாக உயா்ந்துள்ளது. இந்த அணையின் வெள்ள அபாய அளவு 42 அடியாகும். இந்நிலையில் சனிக்கிழமை இந்த அணையின் நீா்மட்டம் 42 அடியாக உயர வாய்ப்புள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 54.10 அடியாக உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, ஆறுகாணி, மாா்த்தாண்டம், அருமனை, சுருளகோடு, பாலமோா், மேல் கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.