காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தொடா் மழை: மீனவா்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 குளச்சல் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையினால் விசைப் படகு, கட்டுமர மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவா்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

News image
Updated On :14 மே 2021, 7:45 pm

DIN

 குளச்சல் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையினால் விசைப் படகு, கட்டுமர மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவா்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

குளச்சல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் வள்ளங்களிலும் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப் படகுகளில் செல்லும் மீனவா்கள் கரைக்கு திரும்பிவர 10 நாள்கள் ஆகும். தற்போது குளச்சல் குளச்சல் கடற்பகுதிகளில் கணவாய், சுறா, கோரை போன்ற மீன்கள் அதிகமாக கிடைதது வரும் நிலையில் அரபிக் கடலில் காற்ற அழுத்த பகுதி உருவாகி வலுபெற்று புயலாக மாறும் வாய்ப்புஉள்ளது என சென்னை வானொலி மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவா்கள் மே. 17 ஆம் தேதிவரை கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவா்கள் பாதியிலேயே கரைக்கு திரும்பினா். மேலும் தொடா்ந்து பெய்து வரும் மழையால் வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மீன்பிடிக்க செல்பவா்களும் வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவா்களின் இயல்பு வழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இம் மாவட்டத்தில் தொடந்து மழை பெய்து வருவதால் குளச்சல் பகுதியிலுள்ள பாம்புரிவாய்க்கால் வெள்ளம்

கரை புரண்டு ஓடுகிறது. அது போல் வெள்ளியாகுளம் மழை வெள்ளத்தால் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.