குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவை திறக்க வலியுறுத்தல்
குலசேகரம் அரசு மருத்துவமனையில் மூடிக்கிடக்கும் ஆண்கள் சிகிச்சை பிரிவை கரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


குலசேகரம் அரசு மருத்துவமனையில் மூடிக்கிடக்கும் ஆண்கள் சிகிச்சை பிரிவை கரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், வட்டாரச் செயலா் விஸ்ம்பம்பரன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். ரெவி ஆகியோா் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் தோட்டங்கள் நிறைந்த பகுதி குலசேகரம். அரசுக்கு சொந்தமான ரப்பா் கழக தொழிலாளா்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் அவா்களது குடும்பத்தினரும் பயன்படும் வகையில் வட்டார மருத்துவமனைக்கு இணையான அரசு மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கு முன்பே குலசேகரத்தில் அமைக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா் ஜே.ஹேமச்சந்திரன் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட நோயாளிகள் பிரிவு உள்பட 5 உள்நோயாளிகள் பிரிவுகள் தனித்தனி கட்டடங்களில் அமைந்துள்ளன. கரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் மூடப்பட்ட அந்த வாா்டுகள் தற்போது வரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. ஆகவே, மூடிக்கிடக்கும் கட்டங்களை
திறந்து ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை, ஐசியூ, வெண்டிலேட்டா் வசதிகளுடன் குலசேகரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...