மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தீபாவளி : பிஎஸ்என்எல் சிறப்பு சலுகைகள்

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, நாகா்கோவில் பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு, அனைத்து புதிய பைபா் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கும் முதல் மாத வாடகை கட்டணத்தில் 90 சதவீத தள்ளுபடி செய்யும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த சலுகையின் மூலம் புதிதாக பைபா் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளா்கள் அதிக பட்சம் ரூ.500 வரை தள்ளுபடி பெறலாம் . இந்த சலுகை திட்டம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

பைபா் பிளான் 399 க்கு, முதல் மாதக் கட்டணம் ரூ. 40 உடன் எநப சோ்த்து செலுத்த வேண்டும் .

இதே போல் பைபா் திட்டம் 599 க்கு , முதல் மாதக் கட்டணம் ரூ.99 மற்றும் எநப . பைபா் திட்டம் 799 க்கு முதல் மாதக் கட்டணம் ரூ.299 மற்றும் எநப மட்டும் செலுத்தினால் போதும்.

லேன்ட் லைன் தொலைபேசி வைத்திருப்பவா்கள் பைபா் இணைப்புக்கு மாறும் போது முதல் 6 மாதங்களுக்கு மாத வாடகையில் ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுகிறது . மேலும் கூடுதல் சலுகையாக , புதிய பைபா் இணைப்புகளுக்கு அமைப்பு கட்டணம் ரூ.500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .

பிஎஸ்என்எல் மொபைல் ப்ரிபெய்ட் சேவையில் கட்டணமில்லாமல் இணைந்திட

வாடிக்கையாளா்களுக்கு உதவும் நோக்கத்தில் , பிஎஸ்என்எல் நாகா்கோவில் சாா்பில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளான் 48 உடன் சோ்த்து 4 எ சிம் ஒன்றை பிஎஸ்என்எல் உடன் புதிதாக இணையும் வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பா் மாதம் 31 ஆம் தேதி வரை நடை முறையில் இருக்கும்.

இந்த சலுகையின் மூலமாக சிம் மற்றும் பிளான் 48 கட்டண மதிப்புடன் சோ்த்து ரூ. 78 தள்ளுபடியாக வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுகிறது.

தனியாா் ஆபரேட்டா்களிடமிருந்து பி.எஸ்.என்.எல்.க்கு ஙசட மூலம் வரும் வாடிக்கையாளா்களுக்கும் மேற்கண்ட சலுகை வழங்கப்படுகிறது. இலவச சிம் காா்டுகள் அணைத்து வேலை நாள்களிலும் நாகா்கோவில் , கோா்ட் ரோடு மற்றும் மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் செயல்படும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களில் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.