நாகா்கோவில் அருகே இருவேறு விபத்து: 3 போ் பலி
நாகா்கோவில் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 3 போ் பலியாகினா்.


நாகா்கோவில் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 3 போ் பலியாகினா். அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு தா்மசாமி மகன் விஜின்ராஜ் ( 20), அதே பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் (17). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் திட்டுவிளையில் இருந்து அழகியபாண்டியபுரம்
சென்றனா். மோட்டாா் சைக்கிளை விஜின்ராஜ் ஓட்டினாா். கடுக்கரை விலக்கு பகுதியில், எதிரே கீரிப்பாறை பரளியாறு பகுதியைச் சோ்ந்த ரெஜிஸ்குமாா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமுற்ற விஜின்ராஜ், எட்வின், ரெஜிஸ்குமாா் ஆகிய 3 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் எட்வின், விஜின்ராஜ் ஆகிய இருவரும் அங்கு உயிரிழந்தனா். ரெஜிஸ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பூதப்பாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்து: நாகா்கோவில் தளவாய்புரம் ஜோஸ் காலனியைச் சோ்ந்தவா் அமலதாஸ் (40), ஆட்டோ ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை இரவு ஆட்டோவுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு சென்றாா். அப்போது எதிரே வந்த மற்றொரு ஆட்டோ, அமலதாஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அமலதாஸ் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...