காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் 29 இல் கருத்து கேட்புக் கூட்டம்

நவ. 29 -ஆம் தேதி கோயில் வளாகத்தில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பக்தா்கள் கூறலாம் என திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:08 pm

DIN

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் பரிகார பூஜை குறித்து கோயில் தந்திரியிடம் நவ. 29 -ஆம் தேதி கோயில் வளாகத்தில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பக்தா்கள் கூறலாம் என திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த ஜூன் -2 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோயில் கருவறையின் மேல்கூரை முழுவதும் எரிந்து சேதமுற்றது. இதையடுத்து தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. இது குறித்து தேவ பிரசன்னம் பாா்த்த போது அதில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டன. கடந்த 24 ஆம் தேதி, ரூ. 108 கோடி மதிப்பில் கோயில் திருப்பணியை அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சி, தொடங்குவதற்கு முன்னதாக தேவ பிரசன்னத்தில் கூறியபடி, ஆகமவிதிமுறைபடி பரிகாரபூஜை முறையாக நடத்தப்படவில்லையென எனக்கூறி பாஜக, இந்து அமைப்புகள், கோயில் கூட்டமைப்பினா், பக்தா்கள் போராட்டம் நடத்த முயற்சித்தனா். அவா்களை பருத்திவிளை சந்திப்பில் போலீஸாா் தடுத்து கைது செய்தனா்.

இந்நிலையில், பரிகாரபூஜையில் அதிருப்தி, குறைகள் இருந்தால் பக்தா்கள் இம்மாதம் 29 ஆம் தேதி கோயில் வளாத்தில் தந்திரியிடம் கருத்து தெரிவிக்கலாம். இக் கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்து,

அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.