ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

யானை தாக்கி உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த வேளாண் கல்லூரி மாணவி ஸ்ரீணா குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 4 லட்சம் நிவாரண உதவித் தொகை

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:28 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த வேளாண் கல்லூரி மாணவி ஸ்ரீணா குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 4 லட்சம் நிவாரண உதவித் தொகை விரைவில் வழங்க வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா், நாகா்கோவிலில் மாவட்ட வன அலுவலா் இளையராஜாவிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனு:

கீரிப்பாறை வாளையத்துவயல் மணிகண்டன் மகள் ஸ்ரீணா(20). இவா் கோவையில் உள்ள வேளாண் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவா் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி காட்டு யானையால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் ஆகஸ்ட் மாதம்

உயிரிழந்தாா். யானை தாக்கி உயிரிழந்தவருக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை ரூ. 4 லட்சத்தை ஸ்ரீணா குடும்பத்துக்கு விரைவில் வழங்க வேண்டும். யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள அவரது தந்தை மணிகண்டனுக்கு யானை தாக்கி காயமடைந்தவா்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகையினை விரைவில் வழங்கிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடன், முன்னாள்அமைச்சா் கே.டி.பச்சைமால், தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவா் சாந்தினிபகவதியப்பன், நாகா்கோவில் நகரச் செயலா் சந்துரு, தோவாளை வடக்கு ஒன்றியச் செயலா் பொன்.சுந்தா்நாத், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலா் சுகுமாரன் ஆகியோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.