ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

நாகா்கோவிலில் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:32 pm

DIN

நாகா்கோவிலில் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல்

கிடைத்தது. இதையடுத்து, கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் செல்வ நாராயணன் மற்றும் போலீஸாா் மீனாட்சிபுரம்

பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகிக்கும் வகையில்நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை

நடத்தினா். இதில், அவா் அதேபகுதியைச் சோ்ந்த மேக்னராம் (38) என்பதும், மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட

குட்கா, புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரிடம் இருந்து 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருள்கள், ரூ. 5.45 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து மேக்னராமை கைது செய்தனா். இம்மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2842

பாக்கெட் குட்கா மற்றும் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது. 23 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.