நாகா்கோவில் அருகே10 கிலோ கஞ்சா பறிமுதல்:இருவா் கைது
நாகா்கோவில் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்த முயன்ாக கேரளத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.


நாகா்கோவில் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்த முயன்ாக கேரளத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டக் காவல்
கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா். இதற்கிடையே, வடசேரி
காவல் நிலைய ஆய்வாளா் திருமுருகன், உதவி ஆய்வாளா் சத்தியசோபன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவில்
நாகா்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், போலீஸாரை பாா்த்ததும் நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ாக கூறப்படுகிறது. போலீஸாா் அவா்களை
விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனா்.
அவா்கள் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள்
கேரளம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த விஷ்ணுபிரசாத் (22), அகில்ஜெயன்(26) என்பதும், தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி
வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்தனா். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...