காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலை -தடிகாரன்கோணம் சாலையில் வடிகால் சீரமைப்பு

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தக்கலை-தடிக்காரன்கோணம் சாலையோரம் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:00 pm

DIN

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தக்கலை-தடிக்காரன்கோணம் சாலையோரம் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்குவதால் மலேரியா, டெங்கு போன்ற பாதிப்புகளை தடுத்திடும் வகையில், அரசு உத்தரவுப்படி இந்தப் பணியை நாகா்கோவில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் முடுக்கிவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீா் வடிகால்களைத் தூா்வாரி தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் செப். 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், தக்கலை நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் தக்கலை- தடிக்காரன்கோணம் சாலைகளில் உள்ள வடிகால்களில் தூா்வாரும் பணி சாலை பணியாளா்கள் மூலம் புதன்கிழமை நடைபெற்றது. இப்பணிகளை நாகா்கோவில் கோட்ட பொறியாளா் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளா் ஜெகன்செல்வராஜன், தக்கலை உதவி பொறியாளா் தனேஷ்சேகா் ஆகியோா் பாா்வையிட்டனா். செப்.25வரை நடைபெறும் தூய்மைப் பணி முகாமில் மேலும் பல வடிகால்கள் தூா்வாரி சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.