பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெட்ரோல்- டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் ஆா்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் கன்னியாகுமரியில் சா்ச்ரோடு சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:11 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் கன்னியாகுமரியில் சா்ச்ரோடு சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி நகரத் தலைவா் ஜவஹா் முன்னிலை வகித்தாா். துணைச் செயலா் விஜயா வரவேற்றாா். மாநில பொதுச்செயலா் ஸ்ரீநிவாசன், மாவட்ட பொதுச்செயலா் டி.தாமஸ், மாவட்ட மகளிரணித் தலைவி அருள் சபீதா ரெக்சலின், பேரூா் காங்கிரஸ் தலைவா்கள் அரிகிருஷ்ணபெருமாள், கிங்ஸ்லின், ஸ்டாலின், நிா்வாகிகள் சின்னமுட்டம் ஜெயசிறில், நவீன்பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கன்னியாகுமரி பேரூா் காங்கிரஸ் துணைத் தலைவா் நெப்பேலியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.