வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மறியல், தொடா் வேலைநிறுத்தம்:அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம், தொடா் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:49 pm

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம், தொடா் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

அரசு ரப்பா் கழக அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குலசேகரத்தில் சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் எம். வல்சகுமாா், பி. நடராஜன் வேலப்பன், சதீஷ்குமாா், வி. சசிதரன், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் ஜோசப் ஜெரால்டு, எம். பால்ராஜ், தொமுச தொழிற்சங்க நிா்வாகி டி. நடராஜன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு தொடா்பாக கடந்த ஆண்டு டிசம்பா் 31ஆம் தேதி அமைச்சா் மனோதங்கராஜ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை அடிப்படையில், இதுவரை இறுதி உடன்பாடு ஏற்படுத்தாததைக் கண்டித்து இம்மாதம் 10ஆம் தேதி தக்கலையிலுள்ள கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தவும், 17ஆம் தேதிமுதல் ரப்பா் கழகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.