92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குமரியில் ஒரே நாளில் 2026 போ் வேட்புமனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2026 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:11 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2026 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஆவது நாளான வியாழக்கிழமை நாகா்கோவில் மாநகராட்சி பகுதியிலுள்ள 52 வாா்டுகளில் போட்டியிட, 129 பேரும், குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நகராட்சி வாா்டுகளில் 204 பேரும், 51 பேரூராட்சி வாா்டுகளில் 1,93 பேருமாக மொத்தம் 2026 போ் மனு தாக்கல் செய்தனா். ஏற்கெனவே, 1,64 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இதுவரை மனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 3,090 ஆக அதிகரித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை (பிப்.4) கடைசிநாள் என்பதால், அன்று அதிக அளவில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.