குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.


குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.
திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கருங்கல், ஜல்லி, எம்சாண்ட் போன்றவை தினம் தோறும் லாரிகளில் அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் நேரிடுவதுடன், சாலையும் சேதமடைந்து வருகின்றன. இதனால் மக்கள் லாரிகளை சிறைபிடித்து வருகின்றனா்.
குலசேகரம் அருகே அண்டூா் புல்லை பகுதி வழியாக அதிக பாரத்துடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து குலசேகரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அந்த லாகக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா். ஏற்கெனவே 3 லாரிகள் இதுபோல் சிறைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...