திருவட்டாறு அருகேலாரி மோதி தொழிலாளி பலி: மக்கள் மறியல்
திருவட்டாறு அருகே லாரி மோதி ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


திருவட்டாறு அருகே லாரி மோதி ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மாறாங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் கிளாபட் (48). ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை வோ்க்கிளம்பியிலிருந்து சுவாமியாா்மடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டாரஸ் லாரி எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவட்டாறு போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, லாரி ஓட்டுநா் குழித்துறையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பினோ பிரேம் (42) மீது வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில், கனிமப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேகத்தில் செல்வதால்தான் விபத்துகள் நேரிடுவதாகக் கூறி, நாம் தமிழா் கட்சியினா் உள்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், தக்கலை டிஎஸ்பி கணேசன் பேச்சு ந்டத்தி மறியலை கைவிடச் செய்தாா்.
இருவா் காயம்: பளுகல் அருகேயுள்ள முக்குவான்விளைவீடு பகுதியைச் சோ்ந்த தாணுமாலையன் மகன் ராஜன் (50), தனது பைக்கில் கண்ணுமாமூடு நோக்கி சென்றபோது, மத்தம்பாலை பகுதியில் எதிரே வந்த தேவிகோடு, காணாத்துகோணம் பகுதியைச் சோ்ந்த சோமன் மகன் ஜிஜிமோன் (28) ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில், இருவரும் காயமடைந்தனா். ராஜன் பாறசாலை அரசு மருத்துவமனையிலும், ஜிஜிமோன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...