மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின்
மாநில உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மாநில உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பாக வாக்களித்து மத சார்பற்ற கூட்டணிக்கு வெற்றியை கொடுத்ததை போல உள்ளாட்சித் தேர்தலிலும், வெற்றியை அளிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் 1 ஆண்டில் 1 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் கரோனா 3 ஆவது அலையை எளிதாக வென்று விட்டோம்.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 நாள்களாக என்னை தேடி வருவதாக கூறியிருக்கிறார். என்னை வீட்டில் கூட தேட மாட்டார்கள். ஆனால் எடப்பாடி தேடுகிறார்.
இதையும் படிக்க- மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: பிப்.18 வரை அவகாசம்
நான் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊர், ஊராக சென்று மக்களோடு மக்களாக இருந்து பிரசாரம் செய்து வருகிறேன். நீட் மசோதா சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்தின்போது கூட நான் அவருக்கு எதிரில்தான் இருந்தேன். அவர் டேபிளுக்கு கீழே பார்த்து கொண்டிருந்தால் எப்படி தெரியும்? திமுக ஆட்சிக்கு வந்த இந்த 8 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பெண்கள் இந்த ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மோடியை பார்த்து தமிழகத்தில் திமுக இருக்கும்வரை பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாது என்று சவால் விட்டுள்ளார். பாஜகவுக்கும் அதன் அடிமையான அதிமுகவுக்கும் திமுக சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்தான் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள். கட்சி நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...