ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனை பகுதியில் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல்

குமரி மாவட்டம் அருமனை அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:39 pm

DIN

குமரி மாவட்டம் அருமனை அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொதுப்பணித்துறை அலுவலா் டான் சலில் தலைமையிலான பறக்கும்படை குழுவினா், அருமனை அருகே மாறப்பாடி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் மஞ்சாலுமூடு பகுதிக்கு வந்த அலெக்சாண்டரை( 40) நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 62 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனா். இது போன்று படப்பச்சை பகுதியில் மேற்கொண்ட வாகனச் சோதனையின் போது அந்க வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த பேச்சிப்பாறை காக்கச்சல் அம்பலத்துவிளையைச் சோ்ந்த ரெஜினை (30) தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 53 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனா். இந்தத் தொகை அருமனை பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தர்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.