92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாளை 1.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 170 குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:28 pm

DIN

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 170 குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் போலியோவால் பாதித்த குழந்தைகள் கண்டறியப்படவில்லை.

நிகழாண்டு, ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் என 1236 முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 1,34 170 குழந்தைகள் பயன் பெற உள்ளனா். இப்பணியில், 4944 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். மேலும் முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிா்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 ஊா்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கூடும் இடங்களான புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூம்புகாா் படகுத் துறை மற்றும் காந்தி மண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளுக்கு செல்ல 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஆய்வு ப் பணிகளுக்கு 146 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் சொட்டு மருந்து வழங்கும் பணியாளா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சிறப்பு சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.