உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவா்களை மீட்க நடவடிக்கை: விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
போா் நடைபெறும் உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவா்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.


போா் நடைபெறும் உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவா்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அவா் அனுப்பியுள்ள கடித விவரம்: தமிழகத்தை சோ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உக்ரைனில் படித்து வருகின்றனா் என்ற தகவல் அறிந்தேன். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இருந்து சென்று அங்கு மருத்துவம் பயிலும் சுமாா் 20 போ் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.
எனவே உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை குறிப்பாக தமிழக மாணவா்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...