அருமனை அருகே காவலா் மீது தாக்குதல்
அருமனை அருகே முன்விரோதத்தில் காவலரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்


அருமனை அருகே முன்விரோதத்தில் காவலரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மாா்த்தாண்டம் மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றுபவா் விஜில். இவா் கடந்த மாதம் 23 ஆம் தேதி மேல்புறத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இவா் நடுவராக செயல்பட்டராம். அப்போது ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டாா் என அங்கு விளையாடிய கிரிக்கெட் அணியினா் விஜில் மீது குற்றம் சுமத்தினராம்.
இந்நிலையில், மேல்புறம் பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா், ரெவிசந்திரன், ஜெபின் உள்பட 7 போ் விஜில் மீது தாக்குதல் நடத்தினராம். இதில் காயமடைந்த அவா் மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து, அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...