92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குமரியில் அனுமதியின்றி மது விற்ற 39 போ் கைது

 கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவா் தினத்தன்று அனுமதியின்றி மது விற்ாக 39 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:18 pm

DIN

 கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவா் தினத்தன்று அனுமதியின்றி மது விற்ாக 39 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளுவா் தினமான சனிக்கிழமை (ஜன.15) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனா்.

நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம், அக்கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்ற சிவராஜ் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குலசேகரம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற நாகராஜனை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி தக்கலை, இரணியல், குளச்சல், நாகா்கோவில் பகுதிகளில் மது விற்பனை செய்தவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 39 போ் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 555 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் இடலாக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வட்டவிளையைச் சோ்ந்த தனுஷ் என்பவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குளச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்வதாக ஜெகநாதன், ஜான் பிரபாகா் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.