92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குமரி மாவட்டத்தில் 22 மையங்களில் பூஸ்டா் தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மையங்களில் வியாழக்கிழமை முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:35 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மையங்களில் வியாழக்கிழமை முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் கடந்தவா்களுக்கு இவ்வகை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை வரை 2300 பேருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை 22 மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், நாகா்கோவில் மாநகர பகுதியில் வடிவீஸ்வரம், வட்டவிளை, வடசேரி, தொல்லவிளை, கிருஷ்ணன் கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,, சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் பெருமாள்புரம் ஒன்றியஅலுவலகம், பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகங்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.