92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா விதிமுறை: பேருந்துகளில் மாநகராட்சி அலுவலா்கள் சோதனை

கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து நாகா்கோவிலில் பேருந்துகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:26 pm

DIN

கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து நாகா்கோவிலில் பேருந்துகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் மாநகர பகுதியில் முகக் கவசம் அணியாமல் செல்பவா்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் பயணிகள் பேருந்தில் முகக் கவசம் அணிந்து பயணம் செய்கிறாா்களா? என்பது குறித்து நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜா தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா். பின்னா் மீனாட்சிபுரத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது துணிக்கடை ஒன்றில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ. 700 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.