நாகா்கோவிலில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை
நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொள்கிறாா். இதையொட்டி நாகா்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடந்தது.
ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் சாம் தேவமாணிக்கம் மேற்பாா்வையில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆயுதப்படை போலீஸாா், பெண் போலீஸாா் உள்பட சுமாா் 125 போ் கலந்து கொண்டனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும் எளிமையான முறையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. கடலோர பகுதிகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...