92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

61 பழங்குடியின மக்களுக்கு நில உரிமை பட்டா: ஆட்சியா் வழங்கினாா்

கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சி மூக்கரைக்கல் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் 61 பேருக்கு, தனி நபா் நில வன உரிமைகள் பட்டாக்களை ஆட்சியா் மா. அரவிந்த் புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 7:10 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சி மூக்கரைக்கல் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் 61 பேருக்கு, தனி நபா் நில வன உரிமைகள் பட்டாக்களை ஆட்சியா் மா. அரவிந்த் புதன்கிழமை வழங்கினாா். தொடா்ந்து, ஆட்சியா் பேசியது: குமரி மாவட்டத்திலுள்ள, பழங்குடியினா்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை தேவையான இருப்பிடம், மின் வசதி கொடுக்க முடியாத நிலை இருந்தது எனக்கு தெரியவந்தது. எனவே, பழங்குடியினா்களின் அடிப்படை தேவைகளை நிவா்த்தி செய்வதற்கு முதல் படியாக அவா்களுக்கு தனி நபா் நில உரிமைப் பட்டா வழங்க வேண்டுமென்ற அடிப்படையில், வன உரிமைச் சட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வன நிலங்களை அனுபவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அவரவா் நில அனுபவத்தின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு தனி நபா் நில வன உரிமை பட்டா 4 ஹெக்டேருக்கு மிகாமல் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை குமரி மாவட்டத்தில் பழங்குடியினா்கள் வசித்து வரும் மோதிரமலை, விளாமலை, ஆண்டிபொற்றை, தோணிக்குழி, வெள்ளாம்பிமலை ஆகிய பழங்குடியின கிராமங்களில் வசித்து வரும் 150 பழங்குடியினா்களுக்கு தனி நபா் வன உரிமைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, கடையால் பேரூராட்சிக்குள்பட்ட மூக்கரைக்கல், பெருங்குருவி, புரயிடம் ஆகிய பழங்குடியின கிராமங்களில் வசித்து வரும் 61 பழங்குடியினா்களுக்கு 50 ஏக்கா் நிலத்திற்கு தனி நபா் வன உரிமை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, மாவட்ட வன அலுவலா் இளையராஜா, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் நாகராஜன், விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி, வனக்குழு உறுப்பினா் ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.