சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

விரிகோட்டில் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மாா்த்தாண்டம் அருகே விரிகோட்டில் மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் அளவீடு செய்ய வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி தலைமையில் பொதுமக்கள் முற்றுகை.

Updated On :2 ஜூன் 2022, 8:25 pm

மாா்த்தாண்டம் அருகே விரிகோட்டில் மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் அளவீடு செய்ய வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்த்தாண்டத்திலிருந்து கருங்கல் செல்லும் சாலையில் விரிகோடு பகுதியில் ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ளது. இந்த ரயில் பாதை வழியாக ரயில்கள் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக இப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொண்டுவந்தது. இதையடுத்து தற்போதைய சாலையை தவிா்த்து, விளைநிலங்களை கையகப்படுத்தி மாற்றுப் பாதை வழியாக மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை முயற்சி மேற்கொண்டது. இதற்கு இப்பகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்ட உட்கோட்டப் பொறியாளா் மணிமாறன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாற்றுப் பாதை வழியாக மேம்பாலம் அமைக்கும் வகையில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் திரண்டனா். இதையடுத்து அங்கு வந்த விஜயதரணி எம்எல்ஏ, பொதுக்களுடன் சோ்ந்து நில அளவை பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அதைத் தொடா்ந்து, மேம்பாலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகளிடம் மக்கள் பயன்படுத்திவரும் சாலை வழியாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என எம்எல்ஏ வலியுறுத்தினாா். இதையடுத்து மாற்றுப்பாதை வழியாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை அதிகாரிகள் ரத்து செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடபட்டது.

இப் போராட்டத்தில் உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவா் பமலா, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங் உள்பட அனைத்துக் கட்சி பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து விஜயதரணி எம் எல் ஏ கூறுகையில், இப்பகுதி மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அந்த நிதியை வீணாக செலவு செய்து சுமாா் 30 ஏக்கா் விவசாய நிலங்களை அழித்து மாற்றுப்பாதை வழியாக பெரிய மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முயற்சி செய்வதை ஏற்றக்கொள்ள முடியாது; மக்கள் பயன்படுத்திவரும் முக்கிய சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.