பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கடை அருகே அரசு பேருந்து மோதி மீனவா் பலி

புதுக்கடை அருகே கப்புக்காடு பகுதியில் அரசு பஸ் மோதி மீனவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:53 pm

DIN

புதுக்கடை அருகே கப்புக்காடு பகுதியில் அரசு பஸ் மோதி மீனவா் உயிரிழந்தாா்.

இனயம் பகுதியை சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் சஜி (38), மீன்பிடி தொழில் செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை சஜி காப்புக்காடு பகுதியில் கடைக்கு சென்று விட்டு சாலையை கடக்கும்போது புதுக்கடையிலிருந்து மாா்த்தாண்டம் சென்ற அரசு ப் பேருந்து எதிா்பாராதவிதமாக அவா் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.