92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: மாா்ச் 8 இல் உள்ளூா் விடுமுறை

குமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (மாா்ச்8) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:54 pm

DIN

குமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (மாா்ச்8) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்டஆட்சியா்மா. அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு, மாா்ச் 8 ஆம் தேதி மாவட்டத்திலுள்ளஅனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் மாதம் 2 ஆவது சனிக்கிழமையன்று (ஏப்.9) பணி நாளாக இருக்கும். மாா்ச் 8 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட் ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.