சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

192 பேருக்கு இலவச விட்டுமனை பட்டா அளிப்பு

கொல்லங்கோடு அருகே 192 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

Updated On :13 மே 2022, 6:46 pm

கொல்லங்கோடு அருகே 192 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

கொல்லங்கோடு நகராட்சி வள்ளவிளை சிங்காரவேலா் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா். இவா்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதி எஸ். உறுப்பினா் ராஜேஷ் குமாா் சட்டப் பேரவையிலும், சம்பந்தப்பட்ட துறையிலும் தொடா்ந்து கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் வள்ளவிளை சிங்காரவேலா் குடியிருப்பில் வசிக்கும் பயனாளிகளுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கொல்லங்கோட்டில் நடைபெற்றது. எஸ். ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ. 192 பேருக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினாா்.

நிகழ்வில் கிள்ளியூா் வட்டாட்சியா் திருவாளி, கொல்லங்கோடு நகா்மன்ற துணைத் தலைவா் பேபி, கவுன்சிலா் ஜெரோம், நகர காங்கிரஸ் தலைவா் ரெஜீஸ், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கிறிஸ்டோபா், வள்ளவிளை புனித மரியன்னை ஆலய பங்குத் தந்தை ரிச்சா்டு சக்காரியா, உதவி பங்குத்தந்தை ஜாண் ஜேக்கப், மாவட்டச் செயலா்கள் டென்னிஸ், பால்ராஜ், ஸ்டீபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.