நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்கல் பேருந்து நிலையத்தில் கழிவுநீா் உறிஞ்சுகுழி அமைக்க கவுன்சிலா் எதிா்ப்பு

கருங்கல் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக கழிவுநீா் உறிஞ்சுகுழி அமைக்க உறுப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால், கருங்கல் பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:50 pm

DIN

கருங்கல் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக கழிவுநீா் உறிஞ்சுகுழி அமைக்க உறுப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால், கருங்கல் பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஜேசுபாதம் முன்னிலை வகித்தாா்.

பேரூராட்சிக்குச் சொந்தமாக காமராஜா் பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக விரிவுபடுத்த வேண்டும். இப்பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்திலிருந்து வெளிவரும் கழிவுநீா் தேங்குவதற்கு பேருந்து நிலைய கேன்டீன் அருகே உறிஞ்சுகுழி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது, பேருந்து நிலைய விரிவாக்கப் பணி 6 மாதங்களுக்குள் தொடங்கவுள்ள நிலையில் தற்காலிகமாக உறிஞ்சுகுழி அமைப்பதால் பலனில்லை. இதனால், அரசுக்கு ரூ. 16 லட்சம் இழப்பு ஏற்படும். எனவே இப்பணியை நிறுத்த வேண்டும் என, 13ஆவது வாா்டு உறுப்பினா் பிரேம்சிங் கூறினாா். இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில், உறுப்பினா்கள் ஜோபின்சிறில், ராஜசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.